குஜராத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடந்த தீ விபத்தில் 18 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பருச் நகர் உள்ள கொரோனா சிகிச்சை மையமான நலன்புரி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 1 அளவில் திடீரென கொரோனா வார்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வார்டில் இருந்த சுமார் 50 கொரோனா நோயாளிகள் தீ விபத்து ஏற்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் சிலர் அங்கிருந்து தப்பித்து வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் அருகிலிருந்தவர்கள் வார்டில் நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக 12 நோயாளிகள் படுக்கையில் படுத்தபடியே தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இதன்பின் தீயணைப்பு துறையினர் மீட்கப்பட்டவர்களில் சிலர் பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.