Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இது சட்டப்படி குற்றம்…. 22 நாள் ஆகிருச்சு…. சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள தோப்புக்காட்டில் கடந்த 22 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் ராசிபுரத்திலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது காவல் துறையினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எடுத்துக்கூறி அவர்களிடம் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று முறையிடுமாறு  அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்று பேரூராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீராக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறிய பின்பு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |