Categories
மாநில செய்திகள்

“தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகும்”…. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…!!

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் 35,836 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் . கொரோனாவால் பாதிக்கப்பட்ட அலுவலர்களுக்கு பதிலாக மாற்று அலுவலர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நாளை தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 6 தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. புதிதாக 6 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும். கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும். தமிழகத்தில் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.நாளை வாக்கு எண்ணிக்கை பணியில் 35 ஆயிரத்து 836 அதிகாரிகள் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.

Categories

Tech |