தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். தேர்தலுக்கு முன்னதாக வும் தேர்தல் முடிந்த பிறகும் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று கருத்துக் கணிப்பு வெளியாகியது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஐந்து ஆண்டுகால ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்ற அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
கச்சா எண்ணெய் விலை 60 டாலராக உள்ளபோது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூன்று ரூபாய் வரை உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயரும் என கூறப்படுகிறது.