Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மாஸா ஜெயிச்சா மட்டும் போதுமா”…. ‘இந்த தப்ப சரி பண்ண மாட்டீங்களா’…! நிக்கோலஸ் பூரனை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் …!!!

நேற்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 26 ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி , அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் 3வது வெற்றியை கைப்பற்றியது. ஆனால் முக்கியமாக அந்த அணியில் ஒருவர், நடப்பு சீசனில் தொடர்ந்து சொதப்பி வருவதால் , பஞ்சாப் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் அணியின் இடம்பெற்றுள்ள  நிக்கோலஸ் பூரன் ,இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்த 7 போட்டிகளிலும் மொத்தமாக 28 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் குறிப்பாக 4 போட்டிகளில் அவர் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று நடந்த போட்டியிலும் ,அவர் டக் அவுட் ஆகி  வெளியேறியது ,அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ரசிகர்கள் அவரது பேட்டிங்கை  கிண்டல் செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே இனி வரும் போட்டிகளில் நிக்கோலஸ் பூரனுக்கு பதில் , டேவிட் மலானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |