ராஜாவின் பார்வையிலே படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக ரோஜா சீரியல் நடிகை காயத்ரி நடித்திருந்தார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 (இன்று) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சன் டிவி ரோஜா சீரியல் நடிகை காயத்ரி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தான் தளபதி விஜய், தல அஜித் இருவரும் முதன் முதலில் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.