சென்னையில் இன்று 1 சவரன் ரூ 72 அதிகரித்ததோடு , 29,000_த்தை நெருங்கி வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார மந்தநிலை , இந்திய பொருளாதார சரிவு , இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது அரசியல் வர்த்தக சூழல் என தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 29 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருகின்றது.சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 28 ஆயிரத்து 824 ரூபாயாக இருந்த நிலையில் இன்று ரூபாய் 72 அதிகரித்து 28,896 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதே போல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9 ரூபாய் விலை உயர்ந்து 3612_ க்கு விற்பனையாகிறது.வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. நேற்று 47 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்ற 1 கிலோ வெள்ளி விலை ரூபாய் 900 உயர்ந்து , 48 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 90 காசுகள் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.