Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதுக்காகவே அவர பிளான் பண்ணி இறக்கினோம்”… ‘ஆர்சிபி தோற்றதற்கு காரணம் இவர்தான்…! ராகுல் ஓபன் டாக்…!!!

நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 26 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றி குறித்து கேப்டன் ராகுல் கூறும் போது , இந்தப்போட்டியில் இந்த மைதானத்திற்காகவே , எங்கள் அணியில் ஹர்ப்ரீத்  பிராரை சிறப்பாக தயார் செய்துள்ளோம். இதன் காரணமாக முதலில் நடந்த போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்தது.

இந்த மைதானத்தில்  பேட்டிங் மற்றும் பவுலிங்  இரண்டிலும், சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் ,என்பதற்காக பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ,அவரை நாங்கள் ஆட்டத்தில் இறக்கினோம். அதற்கேற்றவாறு ஹர்ப்ரீத்தும் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் ,அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக என்னுடன் இணைந்து ,அவர் 25 ரன்கள் குவித்தார். ஆர்சிபி அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ,அணிக்கு வெற்றியை கொடுத்துள்ளார் ,என்று ராகுல் ஹர்ப்ரீதை  பாராட்டிப் பேசியுள்ளார்.

Categories

Tech |