நாளை வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவதால் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் தடுப்பூசி மையங்கள் வழக்கம்போல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது.
இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் தடுப்பூசி மையங்கள் வழக்கம்போல் செயல்படும் என பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழக்கம்போல் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.