Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல…. அலைமோதும் கூட்டம்… அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரி…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா விதிமுறையை மீறிய 3 ஜவுளி கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதியை மீறி செயல்படுபவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஜவுளி கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருப்பதாக மாநகராட்சி ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைந்துள்ளது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் நான்கு ரோடு அருகே அடுத்தடுத்துள்ள ஜவுளிக்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது மூன்று ஜவுளிக் கடைகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருப்பதும், அதிக அளவில் கூட்டம் உள்ளே வர அனுமதித்து தெரிய வந்தது.

மேலும் கடையினுள் சமூக இடைவெளி கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் வாடிக்கையாளர்கள் கடைக்குள் நிற்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அந்த 3 ஜவுளி கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் 10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Categories

Tech |