Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை காப்பகத்தில் பாலியல் பலாத்காரம்… அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்ட சிறுமிகள்..!!

மதுரையில் உள்ள  காப்பகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து குழந்தைகள் அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.     

மதுரை மாவட்டதில் உள்ள  சமயநல்லூர் பகுதியில் குழந்தைகள் காப்பகத்தை மாசா அறக்கட்டளை சார்பில் கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம்  மற்றும் ஆதிசிவன்  ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்த காப்பகத்தில் 25 சிறுமிகள் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் ஆதிசிவன் என்பவர் அங்குள்ள 4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விசாரணை செய்த போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Image result for rape

இதையடுத்து சமூக பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல குழு அலுவலர்கள் அந்த காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு அங்கிருக்கும் 25 சிறுமிகளும் முத்துப்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருக்கும் அரசு பாதுகாப்பகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு  தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட வாய்ப்புள்ளதாக   அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |