கனட அரசு ஜான்சன் அண்ட் ஜான்சனின் என்கின்ற தடுப்பூசியை வினியோகிக்க தற்காலிக தடையை விதித்துள்ளது.
அமெரிக்க நிறுவனத்தினுடைய தயாரிப்பான ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசியை ஒருவர் ஒரே டோஸ்ஸாக முழுவதையும் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக கனடா அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நாடுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா இதனை கொரோனாவிற்கான தடுப்பூசியாக அங்கீகரித்தது. இந்த தடுப்பூசிகள் அமெரிக்காவினுடைய மேரிலேண்ட் பகுதியிலிருக்கும் பால்டிமோரில் இயங்குகின்ற எமர்சன் பயோ சொல்யூஷன் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் கனடா சுமார் 3,00,000 டோஸ்களை பொதுமக்களுக்கு வினியோகிக்க திட்டமிட்ட நிலையில், திடீரென்று ஹெல்த் கனடா ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசி எமர்சன் பயோ நிறுவனத்தினுடைய தயாரிப்பு என்பதால் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய தடை விதித்தது.
இந்த நிறுவனத்தில்தான் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியினுடைய மூலப்பொருட்களை தவறாக பயன்படுத்தியதால் அந்த மருந்துகள் மொத்தமும் அளிக்கப்பட்டது. ஆகையினால் ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசியின் தயாரிப்பிலும் ஏதேனும் தவறுகள் அல்லது கவனக் குறைவு நடந்திருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக சந்தேகம் எழுந்ததால் ஹெல்த் கனடா இந்த தற்காலிக தடையை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகான பாதுகாப்பு, தரம், செயல்திறன் போன்றவற்றை சரிபார்த்த பின்னரே விநியோகத்திற்கு வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது.