பிக்பாஸ் பிரபலம் ஆரி தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி, தோல்வி என அனைத்தையும் கண்டு தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை தொடர்ந்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் அஜித்துக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று டைட்டில் வின்னரான நடிகர் ஆரி, தல அஜித்திற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உழைப்பாளர் தினத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்த தலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/COVGctTBsAO/?igshid=1g42ygfdw3zk8