Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வட்டி குறைப்பு…. எஸ்.பி.ஐ அதிரடி அறிவிப்பு….!!!

உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளன.

இந்நிலையில் 30 லட்சம் வரையிலான வீட்டு கடனுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. இதுவரை 6.94% ஆக இருந்த வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.7% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 30 லட்சத்தில் இருந்து 75 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கு 6.94%, 75 லட்சத்துக்கு மேற்பட்ட வீட்டுக் கடனுக்கு 7.05% வட்டி வசூலிக்கப்படும் எனவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.

Categories

Tech |