Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்…. கடும் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் நேற்று  முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை முதல் முறையை விட தற்போது கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுவதாக தாய், சேய் மகப்பேறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் மூச்சுவிட சிரமப்படுகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 7000 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |