நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் ஐசியூ வார்டில் நுழைந்து நோயாளிகளின் ஆக்சிஜன் பைப்பை எடுத்து விட்டு ஜூஸ் கொடுத்து வீடியோ எடுத்தனர். அந்த சம்பவம் பெரும் சர்ச்சை ஆன நிலையில் மருத்துவமனையில் நுழைவதற்கு ஏபிவிபி அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.