Categories
தேசிய செய்திகள்

“மாநிலங்களவை எம்.பி.யாக போட்டி” மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்..!!

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார். 

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86).  இவர் கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்துள்ளார். சமீபத்தில் இவரது  பதவிக் காலம் முடிவடைந்து விட்டது.

Image
இதையடுத்து மீண்டும் மன்மோகன் சிங்கை எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை எம்.பியாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஜெய்பூரில்  மன்மோகன் சிங் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

Categories

Tech |