தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிப்பதால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகள் மூடப்பட்டு அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் சமீப நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் கட்டுப்பாடுகள் மூலம் ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மேலும் நாமக்கலில் உள்ள நகராட்சி பகுதியில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகள் மற்றும் சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதனையடுத்து இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கபடுவதால் சனிக்கிழமையான நேற்று இறைச்சி மற்றும் மீன் வாங்குவதற்காக அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் நகரில் உள்ள கோட்டை சாலை, திருச்சி சாலை, சேந்தமங்கலம் சாலை உள்ளிட்ட சாலைகளில் உள்ள இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அசைவ பிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.