Categories
மாநில செய்திகள்

அதிமுக தான் வெற்றி, டெல்லியில் இருந்து உறுதி…. பெரும் பரபரப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். அதன்பிறகு வாக்குபெட்டிகள் அனைத்தும் 3 அடுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு  எண்ணிக்கை ஏற்பாடுகள் காலை 8 மணிக்கு தயாராக இருக்கும்.

சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். காலை 8 மணிக்குள் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதன் பிறகு காலை 8.30 படுத்திய வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை, தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் தொடங்கும்.

இந்நிலையில் தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என டெல்லியிலிருந்து இதை சொல்லி இருக்கிறார்கள் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் கொடுத்த பேட்டி ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளும் திமுகவுக்கு சாதகமாக தான் வரும். வாக்கு எண்ணிக்கையில் 11 மணி வரை திமுக முன்னிலையில் இருக்கும்,அதன் பிறகு அதிமுக முன்னிலையில் வந்து வெற்றி பெறும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |