Categories
மாநில செய்திகள்

தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது…. கமல்ஹாசன்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்நிலையில் தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவு என்பதே கிடையாது என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல் நமக்கு புதிய அனுபவம். புதிய தொடக்கம். மக்கள் அன்பே நம் பலம். வெற்றி எனில் கொண்டாடத் தேவையில்லை. தோல்வி எனில் துவள வேண்டியதில்லை. எதுவரினும் மக்கள் பணிகளை தொடருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |