சுவையான தக்காளி ஊறுகாய்..
தேவையான பொருட்கள்:
தக்காளி – 1/4 கிலோ
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
தனியா தூள் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையானஅளவு
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையானஅளவு
செய்முறை:
முதலில் தக்காளியை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மசித்த தக்காளி சேர்த்து வதக்கி , மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு ,பெருங்காயம் போட்டு எண்ணெய் தெளிய இறக்கினால் சுவையான தக்காளி ஊறுகாய் தயார் !!!