திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பு தெரிவித்தால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள இளமங்கலம் பகுதியில் கதிர்வேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இவருடைய 2 மகன்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மூன்றாவது மகனான செல்வகுமார் என்பவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இதனால் செல்வகுமார் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் இப்போது திருமணம் செய்து வைக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் செல்வகுமார் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த கொண்ட அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு செல்வகுமாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று செல்வகுமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.