லாரியும், மினி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கிடாரக்குளம் பகுதியில் மதியழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக மினி வேனை வைத்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் தனது மினி வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் வசிக்கும் சங்கரபாண்டியன் என்பவரை உடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இருவரும் மினி வேனில் புளியங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று கேரளாவில் இருந்து மரத்தடிகளை ஏற்றிக் கொண்டு வேகமாக புளியங்குடி பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் மினி வேனும், லாரியும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒன்றுக்கொன்று நேருக்கு எதிர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் மினிவேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில் டிரைவர் மதியழகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இந்த விபத்தில் சங்கரபாண்டியன் பலத்த காயம் அடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்த சங்கரபாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் உயிரிழந்த மதியழகனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான பிரகாஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.