Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த சுவையான  காராமணிப் பொரியல்  !!!

சத்துக்கள் நிறைந்த சுவையான  காராமணிப் பொரியல்  செய்வது எப்படி ..

தேவையான பொருட்கள் :

காராமணி – 1/4  கிலோ

வெங்காயம் – 1

சீரகம் – 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

கடுகு – 1 டீஸ்பூன்

இஞ்சி , பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் –  1/2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – தேவையான அளவு

உப்பு – தேவைக்கேற்ப

தொடர்புடைய படம்


செய்முறை :

முதலில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் மூன்றையும்  அரைத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம்  சேர்த்து வதக்க வேண்டும்.பின்னர்  இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து    பச்சை வாடை   போகும்  வரை வதக்கி கொள்ள வேண்டும் .  இதனுடன்  காராமணி, தேவையான அளவு  உப்பு  மற்றும்  தண்ணீர் தெளித்து  வேக விட  வேண்டும். காராமணி வெந்ததும்  அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக் கிளறி பரிமாறினால் சத்தான காராமணிப் பொரியல்   தயார் !!!

Categories

Tech |