Categories
உலக செய்திகள்

குளியல் தொட்டியில் குளியல்…. தவறி விழுந்த மொபைல் போன்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்….!!

இளம்பெண் ஒருவர் குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும்போது மின் இணைப்பில் இருந்த மொபைல் போனால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் St. Gallen மாகாணத்தில் இருக்கும் gossau நகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் வியாழக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு குளிப்பதற்காக குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்துள்ளார். அதன்பின் அவர் மின் இணைப்பில் இருந்தவாறு தனது மொபைல் போனில்  அவருக்குப் பிடித்தமான நிகழ்ச்சி ஒன்றை வைத்து பார்த்தபடியே குளியல் தொட்டியில் நீராடியுள்ளார். திடீரென்று அந்த போன் குளியல் தொட்டிக்குள் விழுந்ததால் நீரில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவிக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதலில் அந்த பெண்ணிற்கு முதலுதவி அளித்து காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் அந்தப் பெண் ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது இறந்த இளம் பெண் குடும்பத்தினருக்கு உளவியல் உதவி அளிக்க மண்டல நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் மின் இணைப்பில் இருக்கும் பொருட்களுடன் குளியல் தொட்டியில் இறங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |