Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணீங்க… வாலிபரின் விபரீத முடிவு… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள மேலக்கடையநல்லூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து மாரிமுத்துவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே  சில மாதங்களாகவே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாரிமுத்து மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாரிமுத்து மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த மனைவி இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். இந்த அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாரிமுத்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |