Categories
தேசிய செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து… உள் மதிப்பீட்டில் மதிப்பெண் வழங்கப்படும்… சிபிஎஸ்இ அறிவிப்பு…!!

 கொரோனா நோய் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களின் திறன் அறிந்து உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

புதுடெல்லில் கொரோனா நோய் பரவல் குறைந்த வந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகள் 4 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 21,50,761 பேரும், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 14,30,243 பேரும் தேர்வினை எழுத தயார் நிலையில் இருந்தனர்.

இதனிடையே நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் 2-வது அலையாக சில வாரங்களாகவே தீவிரமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் மாணவர்களின் நலன் கருதி  சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேசமயம் சிபிஎஸ்சி பிளஸ் 2 பொது தேர்வை ஒத்தி வைப்பதாகவும் தகவல் வெளியானது.

கொரோனா நோய் பரவலின் நிலவரம்  குறித்து ஜூன் 1-ஆம் தேதி சிபிஎஸ்இ  ஆய்வு செய்தபிறகு பிளஸ் 2 தேர்வுக்கான தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர். பிறகு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மாணவர்களின் திறன் அறிந்து உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு ஜூன் 3-வது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |