Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 போலீசார் பணியிடை நீக்கம்… உறுதி செய்யப்பட்ட குற்றச்சாட்டு… அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

மாணவனிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்களை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவன் தனது பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்த 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த மாணவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் எங்கே செல்வது என்று தெரியாமல் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். இந்த மாணவரை பார்த்த கோயம்பேடு குற்றப்பிரிவு முதல் நிலை காவல்துறையினர் வேல்முருகன் மற்றும் கார்த்திக் போன்றோர் மாணவனின் கையில் வைத்திருந்த 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்து விட்டு மாணவரை தாக்கி உள்ளனர்.

அதன் பின் நடந்த அனைத்து விவரங்களையும் தனது பெற்றோரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மாணவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர் சென்னைக்கு விரைந்து சென்று கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு காவல் துறையினரும் மாணவரை தாக்கி பணத்தைப் பறித்துச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காவல் துறை இணை கமிஷனர் ராஜேஸ்வரி மாணவனிடம் பணம் பறித்த குற்றத்திற்காக வேல்முருகன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |