ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் 14 நாட்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து ஒடிசா மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மே ஐந்தாம் தேதி தொடங்கி அடுத்த 14 நாட்களுக்கு பொது முடக்கம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.