Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவிழாவில் ஏற்பட்ட காயம்.. விரக்தியில் கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூலி தொழிலாளி பணிக்கு செல்ல முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாட்டேரி என்ற கிராமத்தில் மீனவர் தெருவில் வசிக்கும் 48 வயது கூலித்தொழிலாளி ராமன். இவரது கிராமத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு செல்லியம்மன் கோயில் திருவிழா நடந்துள்ளது. அப்போது ராமனின் கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்ததால் விரக்தியுடன் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பயிர்களுக்கு தெளிக்கக்கூடிய த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்திருக்கிறார். இதில் மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்த ராமனை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பராமன் உயிரிழந்துள்ளார்.

Categories

Tech |