Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிறந்த ஒரு மாத பெண் குழந்தையுடன்…. இளம்பெண் செய்த செயல்… காவல்துறையினரின் நடவடிக்கை…!!

ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை வைத்துக்கொண்டு இளம்பெண் பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு பெண் பிச்சை எடுத்து கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக ஆர்.எஸ் புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அந்த பெண் தான் கையில் வைத்திருப்பது தனது சொந்த குழந்தை எனவும், வறுமை காரணமாக இவ்வாறு பிச்சை எடுப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த இளம் பெண்ணையும், குழந்தையையும் மீட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |