Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்..சுப்ரீம் கோர்ட்டுக்கு மே 10ஆம் தேதி முதல் விடுமுறை..தலைமை நீதிபதி உத்தரவு…!!

 கொரோனா நோய் பரவல் காரணமாக சுப்ரீம் கோர்ட்டிற்கு வருகின்ற 10-ம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை விடுமுறை என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால்  மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. டெல்லியில் 2-வது அலையாக வீசப்படும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இந்த கொரோனா பாதிப்பினை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு முன்பாகவே விடுமுறை அளிக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர். இதன்படி சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே விடுமுறை என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எனவே மே 10ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பின்பு மீண்டும் ஜூன் 28-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் வழக்கம் போல் செயல்பட தொடங்கும். அதன்பின், நவம்பர் 13ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என அதில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |