காஷ்மீர் சரித்திரத்தை ரஜினி படிக்க வேண்டுமென்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில் , மத்திய அரசாங்கம் அவர்களுடைய அஜெண்டாவை தான் நிறைவேற்றுகின்றார்கள். விவாதம் நடத்தி மக்களவை உறுப்பினர்களின் கருத்தை எல்லாம் கேட்டு எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றுவது இல்லை. காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த RTI சட்டத்தை முழுக்க சிதைத்து விட்டார்கள் . எல்லா அதிகாரத்தையும் மத்திய அரசிடம் குவிகிறார்கள்.
மேலும் பேசிய அவர் , அதுமட்டுமில்லாமல் மாநில உரிமைகளை , தனிநபர் உரிமையை சிதைத்து விடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.அரசியல் கட்சி தொடங்கப் போவதாகக் கூறும் ரஜினி காஷ்மீர் விவகாரம் மட்டுமல்லாமல் நீட் பிரச்சினை , முல்லைப்பெரியாறு விவகாரம் உள்பட தமிழகம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளிலும் கருத்து சொல்ல வேண்டும். அவர் காஷ்மீர் சரித்திரத்தை ரஜினி படிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.