Categories
சினிமா தமிழ் சினிமா

வயதில் சிறியவரை திருமணம் செய்யும் அனுஷ்கா…. இணையத்தில் பரவும் தகவல்…!!!

நடிகை அனுஷ்கா தன்னைவிட வயதில் சிறியவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், ரஜினி, சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுஷ்கா. இதைத்தவிர பிரபாஸின் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தேசிய அளவிலும் பிரபலமானவர் அனுஷ்கா.

இப்படத்திற்கு பிறகு அனுஷ்கா காதலில் விழுந்ததாகவும் பல பிரபலங்களை வைத்து இவரைத்தான் அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்த அனைத்து செய்தியையும் அனுஷ்கா மறுத்தார். இதை தொடர்ந்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அனுஷ்காவிடம் உங்கள் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் திருமணம் முடிவானதும் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை அனுஷ்காவிற்கு துபாயை சேர்ந்த தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் நடிக்கவுள்ளதாகவும், அவர் அனுஷ்காவை விட வயதில் சிறியவர் என்றும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அனுஷ்கா தரப்பில் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |