உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்து 22 நாட்களில் நோய் தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்பு குழந்தை குணமடைந்து நலமுடன் வீடு திரும்பி உள்ளது.
உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்த கொரோனா வைரசால் அதிக அளவில் சிறியவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன.
உத்திரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் பிறந்த குழந்தை ஒன்று கொரோனா நோயினை வென்று வீடு திரும்பி உள்ளது. அதாவது தாயின் பிரசவத்திற்கு பின்பு குழந்தை பிறந்து ஒரு சில வாரங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனை அறிந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 15 நாட்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று கொரோனா பாதிப்பிலிருந்து தப்பியுள்ளது.
அதன்பின் கொரோனா முழுமையாக குணமடைந்த பின்பு தாயும்,சேயும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். பிறந்த குழந்தைக்கு 22 நாட்களிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 15 நாட்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்ததால் எதிர்ப்பு சக்தி கிடைத்து கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடுதிருப்பினர். எனவே புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆன்டிபாடி உடனடியாக உருவாகி நோய் எதிர்ப்பு சக்தியை கிடைத்து தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது என்று உத்திரபிரதேச மருத்துவர்கள் கூறுகின்றனர்.