Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம்… இயக்குனர் யார் தெரியுமா?… வெளியான மாஸ் தகவல்…!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் அண்ணாத்த படம் வருகிற தீபாவளியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது ‌.

Did 'Kannum Kannum Kollaiyadithal' director Desingh Periyasamy meet  Rajinikanth recently? Here's the truth! | Tamil Movie News - Times of India

இந்நிலையில் நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் பிரபலமடைந்த தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |