Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்.. கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு முழக்கம்..!!

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.  

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு, மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் பாக்யராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணை தலைவர் சண்முகம் மற்றும் மாவட்ட செயலாளரான செல்வம் போன்றோர் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்கள் கூறியுள்ளதாவது, கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் ஒன்பது ஊராட்சிகளில் கொரோனா காலகட்டத்தில் 100 நாட்கள் வேலை திட்டம் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றும் வெள்ளை நிற அடையாள அட்டையை நீல நிற அடையாள அட்டையாக மாற்றியளிக்க வேண்டும் என்றும் கூறினர்.

மேலும் மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசும், கொளத்தூர், செவரபூண்டி போன்ற ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பேசினர். அதன்பின்பு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மாற்றுத்திறனாளிகள் முழக்கமிட்டனர்.

இதனையடுத்து ஆணையாளர் பழனியை, சந்தித்த சங்க நிர்வாகிகள் அவரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். ஆணையாளர் பழனி, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்த பின்பு தான் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |