கொரோனா தொற்று இரண்டாவது அலை நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் 120 வென்டிலேட்டர்கள் ஜெர்மனியிலிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு நேற்று இரவு வந்தடைந்துள்ளது.
கொரோனா தொற்று இரண்டாவது அலை நாட்டில் வேகமாக பரவி வருவதால் 120 வென்டிலேட்டர்கள் ஜெர்மனியிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளது. இந்த செய்தியை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரும், வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளருமான வால்டர் ஜே லிண்டனர் ட்விட்டர் வாயிலாக உறுதி செய்துள்ளார். மேலும் இரவு 11 மணிக்கு இந்த 120 வென்டிலேட்டர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு தரையிறங்கியுள்ளது.
இதையடுத்து நாளை அந்த வென்டிலேட்டர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்கிடையில் இந்தியாவிற்கு 13 ஜெர்மன் தொழிநுட்ப பணியாளர்கள் பயிற்சி மற்றும் நிறுவலுக்காக வந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கோவிட்-19-ஆல் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.