Categories
தேசிய செய்திகள்

கேரளா: இடதுசாரி கூட்டணி 84 இடங்களில் முன்னிலை…!!

கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலில் 84 இடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.

இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் ஏப்ரல் 6-ஆம் தேதி 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிரெதிரே கடுமையான போட்டி ஏற்பட்டது. அதற்கிடையே பாஜக தனித்து இயங்கி போட்டியிட்டது.

கேரளாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு இடையே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த ஆட்சியில் பாஜகவும் களமிறங்கி மிகவும் விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்றது.

கேரள மாநிலத்தில் தற்போது வாக்கு எண்ணிக்கை என்ன பட்டு வருகின்றது. தற்போது 84 இடங்களில் இடதுசாரி கூட்டணியும், 52 இடங்களில் காங்கிரஸ், 1 இடங்களில் பா.ஜ.க.வும் ஓட்டு எண்ணிக்கை என்ன பட்டு வெளியிட்டுள்ளனர். எனவே இடதுசாரி கூட்டணி 84 இடங்களை பெற்று முன்னிலை வகிக்கின்றது.

Categories

Tech |