Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை காரணமா….? விஷம் குடித்த பெயிண்டர்…. கண்ணீரில் மூழ்கிய மனைவி….!!

குடும்ப பிரச்சனை காரணமாக பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் ஆரோக்கிய செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மிலன்சுகுமாரன் என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பவதாரிணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மிலன்சுகுமாரன் அய்யனார் கோவில் மண்டபத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மிலன்சுகுமாரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |