புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் கறிவாழைத்தார்கள் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளுக்கு நஷ்டம் அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொத்தமங்கலம், அரியலூர், பனங்குளம், குளமங்கலம், கீரமங்கலம், பெரியாளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. விவசயிகள் கஜா புயலுக்கு பிறகு விவசாயிகள் கறிவாழைத்தார்கள் உற்பத்தியை அதிகரித்துள்ளனர். அதனால் விவசாயிகளுக்கு வருவாய் கிடைத்து வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக திருமணம் போன்ற சுப காரியங்களில் 50 % பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பதால் திருமண விருந்தில் வைக்கப்படும் பிரதான கூட்டு வாழைக்காய் தேவை குறைந்து விட்டது.
மேலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் விவசாயிகள் கமிஷன் கடைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முடியாமல் வாழைத்தார்கள் ஓரங்கட்டப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று மன வேதனை அடைந்துள்ளனர்.