சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டுசேரி கிராமத்தில் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர நோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது மேட்டுசேரி கிராமத்தில் வசிக்கும் ஏழுமலையின் வீட்டில் மது பாட்டிகள் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ஏழுமலையை கைது செய்த காவல்துறையினர் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துவிட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.