Categories
அரசியல் மாநில செய்திகள்

அவர் மக்கள் அறிந்த தலைவர், விளம்பரம் தேவையில்லை- கனிமொழி பேட்டி

ஸ்டாலின் மக்கள் அறிந்த தலைவர் , அவருக்கு விளம்பரம் அவசியமில்லை என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

நீலகிரி வெள்ள பாதிப்பை பார்வையிட்ட இரண்டு நாட்கள் பார்வையிட்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் எதோ ஓரிரு அமைச்சர்கள் பப்ளிசிட்டி_க்காக வந்துள்ளார்கள் என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முக.ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக சென்றுள்ளதாக தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.பின்னர் இதற்கு ஸ்டாலின் நேற்று இரவு பதிலளித்தார்.

Image result for கனிமொழி ஸ்டாலின்

இந்நிலையில் இன்று இதுகுறித்த கேள்விக்கு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பதிலளித்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில், ஸ்டாலின் மக்கள் அறிந்த தலைவர் என்பதால் அவருக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியமில்லை.முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை போய் பார்க்காமல் யார் தடுத்தது , ஏன் போகல அதற்கு முதலில் பதில் சொல்ல சொல்லுங்க என்றும் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

Categories

Tech |