Categories
மாநில செய்திகள்

JUST IN: வாக்கு எண்ணிக்கை… இதுவரை உள்ள நிலவரம்…. திடீர் திருப்பம்…..!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 117, அதிமுக 78, காங்கிரஸ் 13, மதிமுக 3, சிபிஎம் 2, சிபிஐ 2, விசிக 3, பாமக 7, பாஜக 5 பிற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

Categories

Tech |