நடிகை மாளவிகா மோகனன் தான் சினிமாவில் நடிப்பதற்கு மம்முட்டி தான் காரணம் என்று கூறியுள்ளார்.
மலையாள திரையுலகில் வெளியான ‘பட்டம் போலே’ என்கின்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் மாஸ்டர் ஆகிய படங்கள் மாபெரும் ஹிட்டடித்தது. இதை தொடர்ந்து பிரபல மலையாள நடிகை மாளவிகா மோகனன் தமிழிலும் பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில் மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் சினிமாவிற்கு வந்ததற்கு மம்முட்டியை காரணம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “எனது தந்தை ஒளிப்பதிவாளராக இருப்பினும் எனக்கு சினிமாவில் நடிப்பதற்கான ஈடுபாடு இல்லை.
ஒரு படப்பிடிப்பு தளத்தில் என்னை மம்முட்டி சந்தித்தார். அப்போதுதான் துல்கர் சல்மான் நடிக்கும் படத்திற்கு கதாநாயகி தேடிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் என்னை கண்ட மம்முட்டி அந்த கதாபாத்திரத்திற்கு நான் மிகச் சரியாக இருப்பேன் என்று கூறி அதில் நடிக்க வைத்தார். அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை பார்க்கும்போது இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.