வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய வெள்ளரி பழங்கள் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வாட்டி வருகின்றது. அதனால் மக்கள் தாகத்தைத் தீர்ப்பதற்காக குளிர்பானங்களை நாடி வருகின்றனர். ஆனால் அதில் பெரும்பாலானோர் இயற்கையாக கிடைக்கும் உணவுகள் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நுங்கு, இளநீர் போன்றவைகள் ஆகும். இந்த வரிசையில் வரக்கூடியதுதான் வெள்ளரி பழங்களாகும். இந்த வெள்ளரி பழங்களானது சீசன் காரணமாக அதிராம்பட்டினம் பகுதியில் குவிந்து வருகின்றது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது “வெள்ளரிப்பழம் குளிர்ச்சியை தரக்கூடியது மட்டுமல்ல மருத்துவ குணம் கொண்டதும் ஆகும். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. வெள்ளரிப் பழம் பழுத்து உடைந்து விடும் என்பதால் அதனை பனை ஓலை, தென்னங்கீற்று, வாழைநாரால் முழுமையாக கட்டி, அதிராம்பட்டினத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக கூறியுள்ளனர். மேலும் இந்த வெள்ளரிப் பழத்தின் விலையானது 40 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.