ஆப்கானிஸ்தானில் நடந்த கார் குண்டு வெடிப்பில் மாணவர்கள் உட்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள லோகர் மாகாணத்தில் புல் இ ஆலமில் தலைநகரில் மருத்துவமனை ஒன்று உள்ளது. நேற்று மாலை முஸ்லிம் மக்கள் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு துறந்தனர். அதன் பின்னர் திடீரென மருத்துவமனைக்கு வெளியே 6.30 மணி அளவில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்த சம்பவத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மருத்துவ மனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ கட்டிடம் ஆகியவை மிக மோசமாக சேதமடைந்துள்ளது. மேலும் மருத்துவ துறையில் பணியாற்றி வரும் பலரும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் மருத்துவமனையில் சுற்றியிருந்த உணவு விடுதிகளில் நோன்பு துறப்பதற்காக சாப்பிட சென்றுள்ளனர். இதையடுத்து தனியார் மருத்துவமனைகளின் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்சு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அதன் பின் அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.