Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு” … கொள்ளையருக்கு காவல்துறையினர் வலைவீச்சு ..!!

சென்னையில் தனியாக நடந்து சென்ற   பெண்ணிடம் செல்போனை பறிக்க முயன்ற கொள்ளையர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னையில் எர்ணாவூர் ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்தவர் வாணி . இவர் மளிகை கடைக்கு சென்று விட்டு செல்போன் பேசியபடி தனியாக சாலையில்   நடந்து சென்றார் . அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு கொள்ளையர்கள் வாணியின் செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் , கொள்ளையரிடம்  செல்போன் சிக்கவில்லை .

Image result for mobile robbery images

 

அப்போது வாணி நிலைதடுமாறி கீழே விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டது. அதன்பின் வாணி எர்ணாவூர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்  . இதுகுறித்து காவல்துறையினர்  காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து ,சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர் .

Categories

Tech |