தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் 209, சிபிஎம் + காங்கிரஸ் 2 மற்றும் பாஜக 29 இடங்களில் முன்னிலையில் உள்ளன. மம்தாவை வீழ்த்த 8 கட்ட வாக்குப்பதிவு, அமித்ஷா மோடி மற்றும் நட்சத்திரங்கள் முயற்சித்தும் மம்தா தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஆனால் அவரை பாஜகவுடன் மோதவிட்டு வேடிக்கை பார்த்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் முழுவதுமாக காணாமல் போயுள்ளனர்.