Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா..!! சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?… வெளியான புதிய தகவல்…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

First look poster of Suriya's Vaadivasal with VetriMaaran is here

அதன்படி வாடிவாசல் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.98 கோடி எனவும் இதில் சூர்யாவிற்கு ரூ.28 கோடி சம்பளம் மற்றும் வெற்றிமாறனுக்கு ரூ.20 கோடி சம்பளம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் புரோடக்சன் காஸ்ட் மட்டுமே ரூ.30 கோடி என்றும் தெரிவிக்கின்றனர் . தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த பின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |